

சென்னையில் பசுமைப் போர்வையை அதிகரிக்க மாநகராட்சியின் பூங்கா நிர்வாகப் பிரிவை தனி துறையாக மாற்ற வும், புதிய பணியிடங்கள் உரு வாக்கவும் அரசின் அனுமதி பெற ஒப்புதல் வழங்கி மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
தேசிய வனக் கொள்கையின் படி, சென்னையில் 33 சதவீத நிலப்பரப்பு, அதாவது 144 சதுர கி.மீ. பரப்புக்கு பசுமைப் போர்வை இருக்க வேண்டும். ஆனால் 9 சதுர கி.மீ. (6.5 சதவீதம்) மட்டுமே பசுமைப் போர்வை உள்ளது. மீதம் உள்ள 133 சதுர கி.மீ. பரப்பில் பசுமைப் போர்வையை ஏற்படுத்த வேண்டும். அதற்காக 13 லட்சத்து 50 ஆயிரம் மரங்களை சென்னையில் நடவேண்டி உள்ளது.
174 சதுர கி.மீட்டராக இருந்த சென்னை மாநகராட்சி பரப்பளவு 426 சதுர கி.மீட்டராக விரிவ டைந்துள்ளது. மாநகராட்சியில் தற்போது 503 பூங்காக்கள், 122 சாலை மைய தடுப்பு பூங்காக்கள், 149 போக்குவரத்து தீவுத் திட்டு பூங்காக்கள், 166 சாலையோர பூங்காக்கள் உள்ளன. மேலும் 57 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், திறந்தவெளி வகையை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட நிலப்பகுதிகள் மாநகராட்சி வசம் வந்தவண்ணம் உள்ளன. அவற்றையும் பூங்காக் களாக மாற்றவேண்டி உள்ளது.
இதுதவிர 284 சென்னை பள்ளிகள், 260 விளையாட்டு மைதானங்கள், 94 தாய்சேய் நல விடுதிகள், 80 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 233 மயான பூமிகள் என அடையாளம் காணப்பட்டுள்ள 2,523 இடங்கள், மரம் நட வாய்ப்பு உள்ள பகுதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதை நிர்வகிக்க, மாநகராட்சி கட்டிடப் பொறியியல் துறையின் ஒரு பிரிவாக இருந்த பூங்கா நிர்வாகத்தை மறுசீரமைப்பது என்று மாநகராட்சி முடிவெடுத் தது.
இதுதொடர்பாக நடத்தப் பட்ட அனைத்து அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் மறுசீரமைப்பு வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, பூங்கா நிர் வாகத்தை தனி துறையாக உரு வாக்கி, இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர், செயற்பொறியாளர், உதவி செயற் பொறியாளர் உள்ளிட்ட 69 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள் ளன. இந்த பணியிடங்களுக்கான பணிகள், அப்பணிக்கு தேர்வு செய்யப்படு வோருக்கான, கல்வி, அனுபவம் குறித்த வரையறையும் உரு வாக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசின் அனுமதி பெற, நேற்று நடைபெற்ற மன்ற கூட்டத்தில் ஒப்பு தல் வழங்கி தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.