

ரூ.223 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிக்கப்பட்ட 20 ஏக்கர்கள் ஆக்ரமிப்பு நிலங்களை கோவை மாநகராட்சி கடந்த நவம்பர் மாதம் முதலான நடவடிக்கையில் மீட்டுள்ளது.
சுமார் 5 மண்டலங்களில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றப் பணிகளை கடந்த நவம்பர் முதல் கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சி அணையர் விஜயா கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:
மாநகராட்சியின் 3 மண்டலங்களில் தனி நபர்களும் நிறுவனங்களும் ஆக்கிரமித்திருந்த சுமார் 65.04 செண்ட் நிலங்களின் மதிப்பு ரூ.5 கோடியாகும், இம்மாதம் மார்ச் 10 மற்றும் 11-ம் தேதிகளில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இந்நிலங்களை மாநகராட்சி மீட்டுள்ளது.
நவம்பரில் ரூ.64.70 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்களையும், டிசம்பரில் சுமார் ரூ.55.45 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்களையும், ஜனவரியில் ரூ.26.20 கோடி மதிப்புள்ள 2.72 ஏக்கர்கள் ஆக்கிரமிப்பு நிலங்களையும், பிப்ரவரியில் ரூ.71.95 கோடி மதிப்புள்ள 7.66 ஏக்கர்கள் ஆக்கிரமிப்பு நிலங்களையும் மீட்டுள்ளோம்.
இதுவரை ரூ.223.30 கோடி மதிப்புள்ள சுமார் 20 ஏக்கர்கள் ஆக்ரமிப்பு நிலங்களை மாநகராட்சி நடவடிக்கைகள் மூலம் மீட்கடுள்ளது.
என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.