

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் முடித்த மாணவர்களுக்கு எம்சி ஸ்கிரீனிங் (MCScreening) தேர்வுக்கு லிம்ரா நிறுவனம் சிறப்பு பயிற்சி அளிக்கிறது. இது வெளிநாடுகளில் மருத்துவம் படித்த மாணவர்கள் எழுதும் தகுதித்தேர்வு.
இதுபற்றி லிம்ரா நிறுவனத்தின் நிறுவனர் முகமது கனி கூறும் போது, ‘‘வெளிநாடுகளில் மருத்து வம் படித்தவர்கள், டெல்லி போன்ற வட மாநில நகரங்களில் மட்டுமே தகுதித் தேர்வுக்கு பயிற்சி பெற முடிந்தது. இதை உணர்ந்த லிம்ரா நிறுவனம், டெல்லியில் இயங்கும், வெளி நாட்டு மருத்துவப் பட்டதாரி களுக்கான முன்னணி கல்வி நிறு வனமான ஏஎஃப்எம்ஜி (அகாடமி ஃபார் ஃபாரின் மெடிக்கல் கிராஜுவேட்ஸ்) உடன் இணைந்து, தமிழகத்திலேயே முதல் முறை யாக இந்த பயிற்சி வகுப்புகளை, சென்னை மயிலாப்பூரில் உள்ள லிம்ரா கல்வி மையத்தில் நடத்துகிறது. அனுபவமிக்க மருத் துவப் பேராசிரியர்களை சென் னைக்கு அழைத்து வந்து, இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன’’ என்றார்.
வெளிநாட்டில் குறைந்த செல வில் எம்பிபிஎஸ் படிக்க லிம்ரா வழிவகை செய்கிறது. லிம்ரா தன் கல்வி சேவையில், வெற்றி கரமாக 14-வது ஆண்டை தொடங்கியுள்ளது. 2016-17ம் கல்வி ஆண்டுக்கான, மருத்துவப் படிப்பின் அனுமதி சேர்க்கையை தொடங்கி நடத்தி வருகிறது. ‘தவோ’, ‘லைசியம் நார்த் வெஸ் டர்ன்’ என 2 மருத்துவப் பல் கலைக்கழகங்களின் அத்தாட்சி பெற்ற இந்தியப் பிரதிநிதியாக லிம்ரா செயல்படுகிறது.
மருத்துவக் கல்லூரி தேர்ந் தெடுப்பதில் உதவி, சேர்க்கை அனுமதி பெறுதல், விசா ஏற்பாடு, வங்கி கடன் ஆலோசனை, பயண ஏற்பாடுகள் எனத் தொடர்ந்து ஐந்தரை ஆண்டுகளுக்கு அன்பான கவனிப்பை லிம்ரா நிறுவனம் வழங்குகிறது. இதற்கு சேவைக் கட்டணமும் வசூலிப்ப தில்லை. லிம்ராவின் மருத்துவக் கல்வி சேவை குறித்து மேலும் தகவல் பெற, ‘லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், எஸ்எம்எஸ் சென்டர் (முதல் தளம்), 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை’ என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 9445483333, 9445783333, 9952922333 ஆகிய செல்போன் எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று லிம்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.