மாவோயிஸ்ட் தாக்குதலில் 3 தமிழர்கள் பலி

மாவோயிஸ்ட் தாக்குதலில் 3 தமிழர்கள் பலி
Updated on
1 min read

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நேற்று தாக்குதல் நடத்தியதில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர்கள் செந்தில்குமார், அழகுபாண்டி, திருமுருகன் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது. ஆனால், முழு தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதன் உண்மைத் தன்மை குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in