Published : 26 Jun 2017 09:58 AM
Last Updated : 26 Jun 2017 09:58 AM

200 பேருந்து நிலையங்களில் சாலை பாதுகாப்பு குறும்படம் திரையிட அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் 200 பேருந்து நிலையங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்களைத் திரையிட வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு (ஆர்டிஓ) போக்குவரத்து ஆணை யரகம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போதிய அள வில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டுமென அமைச்சர் அறிவித்திருந் தார்.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘சாலை விபத்துகளைக் குறைக்கும் வகையில் சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினாலோ, சிவப்பு விளக்கை தாண்டினாலோ, அதிவேகமாக வாகனத்தை இயக்கினாலோ ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யலாம். செல்போன் பேசியபடி வாகனம் இயக்கும் நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்யலாம் என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை, கோயம் புத்தூர், திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களில் போக்குவரத்து விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட நட வடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

இதுகுறித்து அண்ணாநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் எஸ்.தரன் கூறும்போது, ‘‘பொது மக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் மற்றும் குறும்படங்கள் திரையிட வேண்டுமென அறிவுறுத்தப்பட் டுள்ளது. அதன் அடிப்படையில் கோயம்பேடு பேருந்து நிலையத் தில் இருக்கும் திரைகளில் சாலை பாதுகாப்பு தொடர்பான குறும் படங்களை நேற்று முதல் திரை யிட்டு வருகிறோம். வாகனம் ஓட்டும் போது எவ்வாறு கவனமாக இருக்க வேண்டும், பாதுகாப்பு விதி முறைகள் என்ன? சாலைகளில் இருக்கும் விதிமுறை குறியீடு களின் விளக்கம் என்ன? உள்ளிட் டவை குறித்து விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x