சிதம்பரத்தில் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்தார் விஜயகாந்த்

சிதம்பரத்தில் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்தார் விஜயகாந்த்
Updated on
1 min read

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொண்டர்களைச் சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் சிதம்பரம் வந்து தங்கினார். பின்னர் அவர் நேற்று கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் சிதம்பரம் சிவகாமிஅம்மை கலையரங்கத்தில் நடந்த ‘உங்களுடன் நான்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு, தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியையொட்டி சிதம்பரத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தேமுதிக. செயலாளர் சபா சசிகுமார் மற்றும் துணை செயலாளர் பாலு ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in