

வருமானவரி சோதனையின் பின்னணியில் மத்திய பாஜக அரசு இருப்பதாக, அதிமுக (அம்மா) கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
‘‘ஓபிஎஸ் அணியினரை டெல்லி யில் உள்ள சக்திதான் இயக்கு கிறது. வெற்றி பெறப்போவது அதிமுக (அம்மா) அணிதான் என்ப தால் தேர்தலை தள்ளிவைக்க முயற்சிக்கின்றனர்.
இதன் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளன’’ என்று அதிமுக (அம்மா) அணியின் எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியம், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் கூறினர்.
சரத்குமாருக்கு அனுமதி
சோதனை தொடர்பாக செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியபோது, ‘‘டிடிவி தினகரனுக்கு நான் ஆதரவு தெரிவித்த நிலையில், நான் பிரச்சாரத்துக்கு செல்வதை தடுப்பதற்கான முயற்சிதான் இது’’ என்றார்.
முன்னதாக, தேர்தல் பிரச்சாரத் துக்கு செல்ல அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் அவர் கூறினார். ‘‘பிரச்சாரம் முடித்து வந்ததும் என்னிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுங்கள்’’ என்றும் கூறி னார். இதையடுத்து, அவரை அதிகாரிகள் வெளியே செல்ல அனுமதித்தனர்.