சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் மாணவர்கள் புகார் செய்யலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் மாணவர்கள் புகார் செய்யலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

அண்ணா பல்கலைக்கழகம் நடத் தும் பொது கலந்தாய்வு மூலம் தனியார் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு குறிப் பிட்ட கல்விக்கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய தர வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு ரூ.45 ஆயிரமும், இதர படிப்புகளுக்கு ரூ.40 ஆயிரமும் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் கல்லூரிகளில் இதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதுதொடர்பாக மாணவர்கள் புகார் செய்யலாம்.

விழாக்கோலம்

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வருகையால் அண்ணா பல்கலைக்கழகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் எங்கு பார்த்தாலும் மாணவர் களும், பெற்றோர்களும் தென்படு கிறார்கள். வெளியூர்களில் இருந்து வந்துள்ள மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக நுழைவு வாயில் நின்றுகொண்டு செல் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

பொது கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி முடிவடைகிறது. ஆரம்பத்தில் தினமும் ஏறத்தாழ 3 ஆயிரம் பேர் என்ற அளவில் நாட்கள் செல்லச்செல்ல அதிக பட்சம் 7 ஆயிரம் பேர் வரை யிலும் கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார்.

காலியிடங்கள் பட்டியல் வெளியீடு

கலந்தாய்வின் ஒவ்வொரு இருக்கை முடிய முடிய கல்லூரி கள், பாடப்பிரிவுகள் வாரியாக காலியிடங்களின் விவரம் உடனுக் குடன் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதேபோல் தினமும் மாலை 6.30 மணியளவில் கலந்தாய்வு முடிந்தவுடன் இரவு 7 மணிக்கு காலியிடங்கள் பட்டியலும் இணையதளத்தில் வெளியிடப்படும். மறுநாள் கலந்தாய்வுக்கு செல்கின்ற மாணவர்களுக்கு காலியிடங்கள் பற்றிய விவரம் பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

வெளிமாநில மாணவர்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிப்பதற்காக பிஇ, பிடெக் படிப்பில் 50 இடங்களும், பி.ஆர்க். படிப்பில் 2 இடங்களும் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

வெளிமாநில ஒதுக்கீட்டு இடங் களில் சேருவதற்கு ஜூலை மாதம் 9-ம் தேதிக்குள் ஆன் லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

காலியிடங்கள், அடிப்படை கல்வித்தகுதிகள், குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி, விண் ணப்பிக்கும் முறை உள் ளிட்ட விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.annauniv.edu) தெரிந்துகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in