

இந்தியன் ஆயில் நிறுவனம் தனது அலுவலகங்களில் சூரிய ஒளி மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அத்துடன், இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க்குகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு கருவிகளை மானிய விலையில் வாங்கவும் இந்நிறுவனம் உதவி செய்து வருகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வரு கிறது. குறிப்பாக, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவ லகங்கள், தனியார் நிறுவனங் கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட் டவற்றில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்காக, மின்சாதன கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் இந்த முயற் சிக்கு கைகொடுக்கும் விதமாக இந்தியன் ஆயில் நிறுவனம் தனது அலுவலகங்களில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் நாளுக்கு நாள் மின்தேவை அதிக ரித்து வருவதால் அதை ஈடுசெய்ய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் படி, இந்தியன் ஆயில் நிறுவன அலுவலகங்கள், எண்ணெய் சுத்தி கரிப்பு நிலையங்கள், விருந்தினர் மாளிகைகள் உள்ளிட்ட கட்டங் களின் மீது சூரிய ஒளி தகடு களை அமைத்து மின்சாரம் தயாரிக் கப்படும். ரூ.30 கோடி செலவிலான இத்திட்டத்தின் மூலம் தினமும் 20 ஆயிரம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும். எங்கள் தேவைக்குப் போக எஞ்சியுள்ள மின்சாரம் மாநில அரசின் மின்தொகுப்புக்கு வழங்கப்படும்.
இதைத் தவிர, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டீலர்களாக உள்ள பெட்ரோல் பங்குகளிலும் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பு கருவிகளுக்காக வங்கிக் கடன் வாங்க நாங்கள் உதவி செய்கி றோம். மாநிலம் முழுவதும் மொத் தம் உள்ள 2 ஆயிரம் ஐஓசி டீலர் பெட்ரோல் பங்குகளில் 300 பங்க்கு களுக்கு மேல் நாங்கள் கடன் உதவி பெற்றுத்தந்துள்ளோம்.