Published : 16 Jul 2016 08:08 AM
Last Updated : 16 Jul 2016 08:08 AM

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி

மின் தேவை குறைந்ததால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிறுத்தி வைக் கப்பட்ட 1 மற்றும் 2-வது அலகுகளில் மீண்டும் மின் உற்பத்தித் தொடங்கியது.

தூத்துக்குடி அனல் மின் நிலை யத்தில் தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் சராசரி யாக 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிற து. தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகமானதால், மாநி லத்தின் தேவையைவிட அதிக மான மின் உற்பத்தி ஏற்பட் டது.

இதையடுத்து தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் 630 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த மாதம் 19-ம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட 1-வது மற்றும் 2-வது அலகுகளில் நேற்றுமுன்தினம் மீண்டும் மின் உற்பத்தித் தொடங்கியது. தற்போது 3-வது அலகு மட்டும் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத் தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x