Published : 22 Mar 2017 10:30 AM
Last Updated : 22 Mar 2017 10:30 AM

புதிய இயக்கம் தொடங்குகிறார் இயக்குநர் தங்கர் பச்சான்: இணைந்து பயணிக்க இளைஞர்களுக்கு அழைப்பு

புதிய இயக்கம் ஒன்றை தொடங்க இருப்பதாக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தங்கர் பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கை:

நெடுங்காலமாகவே ஏதாவதொரு பெயரில் இயக்கம் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என என்மீது பற்றுள்ளவர்களும், அக்கறை கொண் டவர்களும் கேட்டுக்கொண்டே இருந் தார்கள். எனக்கு அதற்கான நேரமும் இல்லை; அப்படிப்பட்ட எண்ணமும் இல்லை என இதுவரை மறுத்து வந்தேன்.

தற்போதுள்ள சூழ்நிலையைப் பார்த்தால் தமிழர்களின் வாழ்வை சூறையாடியவர்களின் எண்ணிக் கையை விடவும் சூறையாடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை நாம் எல்லோரும் உணரமுடியும். இவ்வளவு காலம் நாம் அனுபவித்த அத்தனைத் துயர்களுக்கும், சுரண்டல்களுக்கும், அநீதிகளுக்கும் காரணம் நாம் நம் வாக்குரிமையை சரியாக பயன் படுத்தத் தவறியதுதான்.

படித்து முடித்து வேலை வேண்டி பதிவு செய்தும், பதிவு செய்யாமலும் இருக்கின்ற ஒன்றேகால் கோடி இளைஞர்கள் ஒன்றிணைந்தால் நம் சிக்கல்களையும், தேவைகளையும் தீர்த்து கொள்கிற ஆட்சியை நம் இளை ஞர்களே உருவாக்கிவிட முடியும்.

அது அமைய வேண்டுமானால் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி யைத் தந்து நேர்மையானவர்களை அடையாளம் காண்பித்து குழப்பத் திலிருக்கும் மக்களுக்கு புரிய வைத்து புதிய அரசியலை உருவாக்க வேண் டிய தேவை ஒவ்வொரு சமூகத்தைப் பற்றிய அக்கறையுடையவர்களுக்கும் இருக்கிறது.

நாம் அனைவருமே இதையெல் லாம் உணர்ந்திருந்தாலும் தனித்தனி யாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். இக்கருத்தை ஏற்றுக்கொள்பவர்கள் இனியாவது இந்த இயக்கத்தில் இணைத்துக்கொண்டு ஒன்றுபட்டு நம் மக்களுக்கு வாக்குரிமையின் வலிமையை உணர்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இனி ‘மக்கள் பணி’ என்பது தங்கர் பச்சான் எனும் தனிப்பட்ட பெயர் கொண்டு இல்லாமல் ஒரு இயக்கத் தின் பெயர் கொண்டு செயல்பட வேண் டும். இந்த இயக்கம், இளைஞர்களா கிய உங்களுக்கானது. இதனை உரு வாக்கி உங்களிடமே கொடுத்து விட்டு உங்களுக்கு உறுதுணையாக இருந்து செயல்பட விரும்புகிறேன். அந்த இயக்கத்துக்கான பெயரை நான் தேர்வு செய்வதைவிட மாண வர்களாகிய, இளைஞர்களாகிய, நம் குடிமக்களாகிய நீங்கள் தேர்வு செய்வதுதான் பொருத்தமாக இருக் கும்.

இதில் இணைய விரும்புபவர்கள், இணையதளம் மூலம் என்னை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x