

பாஜக வேட்பாளர்கள் மிரட்டப் படுவது, தமிழகத்தில் ஜனநாய கப் படுகொலை நடப்பதையே காட்டுகிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி நாளான திங்கள்கிழமை நெல்லை பாஜக மேயர் வேட்பாளர் வெள்ளையம்மாள் தனது மனுவை வாபஸ் பெற்றார். அதேபோல ஆவடி, பல்லாவரம் நகராட்சிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். ஆளுங்கட்சியின ரின் மிரட்டலுக்கு பயந்தே வேட் பாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்றதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னை யில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஜனநாயக முறைப்படி போட்டியிட பாஜக முடிவு செய்து வேட்பாளர் களை அறிவித்தது. ஆனால், வேட்பாளர்களை மிரட்டும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் நெல்லை மேயருக்கான பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் தனது மனுவை வாபஸ் பெற்றுள் ளார். வெள்ளையம்மாளை கடந்த சில நாட்களாகவே சிலர் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். பாஜக நிர்வாகிகள் அவருக்கு ஊக்கம் அளித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளையம் மாளை நெல்லை மாநகராட்சி துணை மேயர் அழைத்து மிரட்டியதாகவும், அவரை சென்னை அழைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேட்பாளர்களை மிரட்டும் சம்பவம் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. ஜனநாயகத் தின் மீது நம்பிக்கை கொண்டு தான் தேர்தலில் போட்டியிடு கிறோம். ஆனால், தமிழகத்தில் ஜனநாயகப் படுகொலை நடக்கிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட முதல்வர் ஜெயலலிதா, உடனே இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் கட்சி யினரை தேர்தலை சந்திக்க தயார்படுத்த வேண்டும்.
எங்கள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மேல்மலை யனூர் பிரபாகரன் கடத்தப்பட வில்லை என்றும், அரசியல் கட்சித் தலைவர்கள் பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், பிரபாகரன் இதுவரை வீட்டுக்கு வரவேயில்லை. அவரது மனைவியையும் ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 2 மணிக்கு மேல் தொடர்பு கொள்ள முடிய வில்லை. நாங்கள் புலனாய்வு அமைப்பு நடத்தவில்லை. அந்த வேலையை சம்பந்தப்பட்ட துறையினர்தான் செய்ய வேண்டும். இதை விட்டுவிட்டு கட்சித் தலைவர்களை தேர்தல் ஆணையம் குறை சொல்வது உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
இவ்வாறு தமிழிசை கூறினார்.