

‘தி இந்து’ (தமிழ்) யூ-டியூப் சேனலில் புதிய வீடியோ பகுதி தொடங்கப்பட்டுள்ளது. ‘வாழ்வு இனிது’ எனும் தலைப்பிலான இந்த வீடியோ தொடர், வாரம் இருமுறை பதிவேற்றப்படுகிறது.
தின வாழ்வில் பதற்றங்கள் தவிர்த்து, மன உளைச்சலின்றி இருக்க வழி சொல்கிறார் ‘இசைக்கவி’ ரமணன். ‘தி இந்து’ இணையதள சிறப்பு வீடியோவாக பதிவேற்றப்பட்டுள்ள முதல் பாகத்தில், மகிழ்ச்சியோடு இருப் பது எவ்வளவு எளிமையானது என இவர் விளக்கியுள்ளார்.
இவரது தன்னம்பிக்கை உரை திங்கள் மற்றும் வியாழக்கிழமை களில் ‘தி இந்து’ யூ-டியூப் தளத் தில் (https://www.youtube.com/user/tamithehindu) பதிவேற்றப்படுகிறது. சுமார் 5 நிமிடங்களில், அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவற்றை பகிர்ந்துகொள்ளும் ரமணன், இதற்காக இசையமைத்து பாடி, நிகழ்ச்சியை சுவாரஸ்யப்படுத்து கிறார். ‘வாழ்வு இனிது’ முதல் பாகத்தை http://bit.ly/28M4Xt3 என்ற தளத்தில் பார்க்கலாம்.