திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: அரசுக்கு நெருக்கடி கொடுப்பது எப்படி? - துரைமுருகன் அறிவுரை

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: அரசுக்கு நெருக்கடி கொடுப்பது எப்படி? - துரைமுருகன் அறிவுரை
Updated on
1 min read

சட்டப்பேரவையில் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுப் பது எப்படி என்பது குறித்து திமுக எம்எல்ஏக்களுக்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 89 எம்எல்ஏக்களுடன் வலு வான எதிர்க்கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது. இந் நிலையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப் பட்டது. பட்ஜெட் மீதான விவா தம் வரும் 25-ம் தேதி தொடங் குகிறது. 29-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில ளித்து நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகிறார்.

ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரை துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது. சட்டப் பேரவை கூட்டத்தொடர் நடை பெற இருப்பதை முன்னிட்டு திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் அக் கட்சியின் தலைமை அலுவல கமான அண்ணா அறிவால யத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். சட்டப்பேரவையில் அனுபவம் வாய்ந்த துரைமுருகன், தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்ற கொறடா அர.சக்கரபாணி ஆகியோர் எம்எல்ஏக்களுக்கு பல அறிவுரைகளை கூறினர்.

இக்கூட்டத்தில் துரை முருகன் பேசும்போது, “கடந்த முறை 23 பேர் மட்டுமே இருந்த தால் எங்களை அதிமுகவினர் எள்ளி நகையாடினர். வெளி நடப்பு செய்ய வேண்டும். இல்லையெனில் வெளியேற் றப்படுவோம் என்ற நிலையே இருந்தது. ஆனால், இப்போது நம்மை அவ்வளவு சுலபமாக வெளியேற்ற முடி யாது. முதல்வர், அமைச்சர் கள், அதிமுக எம்எல்ஏக்கள் என்ன பேசினாலும் அதற்கு பதிலடி கொடுக்க நாம் தயாராக இருக்க வேண்டும். கடந்த 5 ஆண்டு கால அதிமுக அரசின் கொள்கை விளக்க குறிப்புகள், பட்ஜெட் உரைகள், 110 விதியின் கீழ் முதல்வர் படித்த அறிக்கை கள், முதல்வர், அமைச்சர் களின் பேச்சுகளை படித்து குறிப்பெடுத்து பதிலடி கொடுக்க தயாராக இருக்க வேண்டும்” என பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய தாக கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏ ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in