அலங்காநல்லூரில் அடங்காத காளைக்கு கார் பரிசு: ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக பிரம்மாண்ட அறிவிப்பு

அலங்காநல்லூரில் அடங்காத காளைக்கு கார் பரிசு: ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக பிரம்மாண்ட அறிவிப்பு
Updated on
2 min read

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அடக்க முடியாத திறமையான காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும். மேலும் பவர் டில்லர், 5 புல்லட் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் தயாராக உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித் துள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு வரும் பிப். 10-ம் தேதி நடக்கவுள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் விழா என்பதால் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இது குறித்து ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடு குழுவினர் நேற்று வாடிவாசல் அருகே செய்தியாளர்களிடம் கூறியது: ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்க தமிழக முதல்வர் வருகிறார். மேலும், ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி அலங்காநல்லூர் உள்ளிட்ட மாநிலம் முழுவதிலும் போராட்டங்கள் நடத்திய பல்வேறு கட்சி தலைவர்கள், மாண வர்கள், இளைஞர்களையும் ஜல்லி க்கட்டினை காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

இதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட யாரும் விதிவிலக்கல்ல. அதேபோல் திமுகவினர் உட்பட யார் நன்கொடை வழங்கினாலும் ஏற்போம். ஆனால், விழா ஏற்பாடுகளை கமிட்டி தான் மேற் கொள்ளும். இதில் இதர கட்சியினர் உள்ளிட்ட எந்த அமைப்பினரும் தலையிட அனும தியில்லை.

கடந்த 1987-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளை தமிழகத்தின் ஆளுங்கட்சியால் நியமிக்கப்படும் கிராம விழா கமிட்டியாளர்கள் மட்டுமே நடத்தி வந்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்பது முனியாண்டி சுவாமி வகையறா திருக்கோயில் சார்பில் இந்து அறநிலையத் துறை மூலம் நடத்தப்படும் அரசு விழாவாகும். இக்கோயில் அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படாத நேரத்தில் கிராம விழா கமிட்டியினரே அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தி வந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக ஆளுங்கட்சியின் வழிகாட்டுதலின்படியே கிராம விழா கமிட்டி செயல்பட்டு வந்துள்ளது. அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. இந்த கமிட்டி மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி ஜல்லிக்கட்டு விழாவை நடத்தும்.

இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவுக்கு பார்வையாளர்கள் வருவார்கள் என்பதால், அலங் காநல்லூரில் முக்கியமான இடங்களில் 10-க்கும் மேற்பட்ட எல்இடி திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. சிறந்த பிடிபடாத காளையின் உரிமையாளருக்கு கார் மற்றும் பவர் டில்லர் பரிசாக வழங்கப்பட உள்ளது. யாரையும் பிடிக்க விடாதது மட்டுமின்றி, களத்தில் ஒரு நிமிடம் முதல் 5 நிமிடம்வரை நின்று விளையாடும் சிறந்த காளை தேர்வு செய்யப்பட்டு, இந்த சிறப்பு பரிசு வழங்கப்படும்.

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் தங்கம்,வெள்ளி காசுகள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், பாத்திரங்கள், வேட்டி,துண்டுகள் உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே முதல்முறையாக வழங்கப்பட உள்ளன. ஜல்லி க்கட்டு போராட்ட த்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக தனி கேலரி அமைத்து, அங்கு அவர்களை இலவசமாக அனுமதிக் கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிப். 6-ம் தேதி மாடுபிடி வீரர்களுக்கும், 7-ம் தேதி காளைகளுக்கும் பதிவு நடைபெறும் என்றனர்.

விழாக்குழு தலைவர் சுந்தரரா ஜன், செயலாளர் சுந்தரராகவன், பொருளாளர் கணேசன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் அழகுராஜா உள்ளிட்ட கமிட்டி நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் உடன் இருந்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்து வாடிவாசல் அருகே ஆலோசனை நடத்தும் விழா கமிட்டியினர்.

திமுக முயற்சி முறியடிப்பு

இது குறித்து விழா குழுவினர் கூறியது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண மு.க.ஸ்டாலின் வர திட்டமிட்டுள்ளதாகவும், அவருக்கு கிராம கமிட்டி வரவேற்பு அளிக்க வேண்டும் என திமுகவினர் விழா கமிட்டியை வற்புறுத்தியுள்ளனர். கோயிலுக்கு அறங்காவலர் குழு இல்லாததால், கமிட்டியில் யார் வேண்டுமானாலும் இடம் பெறலாமே என தொடர்ந்து முயற்சித்துள்ளனர். திமுக வடக்கு செயலாளர் பி.மூர்த்தி தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

இதையறிந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்டச் செயலர் வி.வி.ராஜன் செல்லப்பா திமுகவினர் தலையீடு இருக்கவே கூடாது என உத்தரவிட்டதுடன், செலவுகள் அனைத்தையும் பார்த்துக்கொள்வதாகவும் உறுதி அளித்துள்ளனர். மேலும், திமுக ஆட்சியில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் தற்போதும் தொடர்கின்றன என்பதை வெளிப்படையாக அறிவிக்கும்படியும் கமிட்டியினருக்கு உத்தரவிட்டுள்ளனர். இதன் எதிரொலிதான் நேற்றைய பேட்டி என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in