Published : 23 Jul 2016 08:56 AM
Last Updated : 23 Jul 2016 08:56 AM

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் அறிவுரை

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனிதாபிமான அடிப்ப டையில் தீர்வு காண வேண்டும் என்று இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் ஏ.நடராஜன் கூறினார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்க ழகத்தில் நேற்று நடைபெற்ற, துணைத் தூதருக்கான வர வேற்பு விழாவில், ஏ.நடராஜன் பேசியது:

இந்தியாவைப் பற்றிய வெளி நாடுகளின் பார்வை, தற்போது மாறியுள்ளது. இந்தியர்களின் கணினி தொழில்நுட்ப அறிவை, உலகம் முழுவதும் உள்ளவர்கள் வியந்து போற்றுகின்றனர். மாணவர்கள் எளிமை, பரந்த மனப்பான்மை, உதவி செய்யும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். இயற்கையை, தூய் மையைப் பாதுகாக்க வேண்டும். பிற மொழிக் கலப்பு இல்லாமல் தமிழைப் பேச வேண்டும்.

இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை அரசியல் பிரச்சி னையாக உருவெடுத்துள்ளது. இலங்கைக் கடற்படையால் சிறை பிடிக்கப்படும் தமிழக மீனவர்க ளை, யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில்தான் அடைப்பார்கள். அவர்களுக்கு நாங்கள் உதவிக ளைச் செய்தாலும், அவர்களது துன்பங்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது.

எனவே, இரு நாடுகளின் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, மனி தாபிமான அடிப்படையில் பிரச் சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார்.

இலங்கை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நவரத்தினம், கனகசபாபதி, நாகேஸ்வரன், சர வணபவாநந்தன், சிறீ தயாளன், மொரீஷியஸ் பேராசிரியர் கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x