மாணவர்களுக்கு ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு: ‘வெற்றி’ ஐஏஎஸ் கல்வி மையத்தில் 31-ம் தேதி இலவச கருத்தரங்கம்

மாணவர்களுக்கு ஐஏஎஸ் பயிற்சி வகுப்பு: ‘வெற்றி’ ஐஏஎஸ் கல்வி மையத்தில் 31-ம் தேதி இலவச கருத்தரங்கம்
Updated on
1 min read

கல்லூரி மாணவர்களுக்கான ஐஏஎஸ் பயிற்சி வகுப்புகள் குறித்த இலவச கருத்தரங்கம், சென்னை ‘வெற்றி’ ஐஏஎஸ் கல்வி மையத்தில் வரும் 31-ம் தேதி நடத்தப்படுகிறது.

சென்னை ‘வெற்றி’ ஐஏஎஸ் கல்வி மையத்தில் கல்லூரி மாணவர்களை ஐஏஎஸ் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. கல் லூரிப் படிப்பு முடித்த ஆண்டிலேயே ஐஏஎஸ் தேர்வில் மாணவர்களை வெற்றிபெற வைப்பதே இப் பயிற்சியின் நோக்கமாகும். இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள மாணவி தீனா தபி 22-வது வயதில் கல்லூரிப் படிப்பு முடித்த ஆண்டி லேயே இத்தேர்வில் வெற்றி பெற்ற வர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெற்றி’ ஐஏஎஸ் கல்வி மையத்தில் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் 3 ஆண்டுகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெறும். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறத் தேவையான எழுத்து திறன் மேம்பாட்டு பயிற்சி, பொது அறிவு, சிந்திக்கும் திறனைத் தூண்டுதல், ஆளுமைத் திறன் மேம்பாடு, அடிப்படைக் கல்வி போன்றவை இதில் பயிற்றுவிக்கப்படுகிறது.

பயிற்சி குறித்த இலவச கருத்தரங்கம் அண்ணா நகர் ‘வெற்றி’ ஐஏஎஸ் கல்வி மைய அலுவலகத்தில் ஜூலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதில் கலந்துகொள்ள 96001 24042, 044 - 26266326 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இத்தகவலை ‘வெற்றி’ ஐஏஎஸ் கல்வி மையத்தின் இயக்குநர் மு.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in