தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

தலைக்கவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தமிழக அரசிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகா தேவன் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியனை பார்த்து, ‘‘இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என நீதிபதி என்.கிருபாகரன் கடந்த ஆண்டு உத்தரவிட்டார். அந்த உத்த ரவை எதிர்த்து மேல் முறையீடு செய் யப்பட்டது. அந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, நாங்க ளும் அந்த உத்தரவை உறுதி செய்தோம்.

சிறிது காலம் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வந்தனர். தற்போது அந்த நிலை இல்லை. தலைக்கவசம் அணியாமல் பலர் செல்வதை நாங்கள் தினமும் பார்க்கிறோம். பள்ளி செல்லும் மாணவர்களும் தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டு கின்றனர். அவர்கள் மீது காவல் துறை அதிகாரிகளும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு கூடுதல் தலைமை வழக்கறி ஞர் அரவிந்த் பாண்டியன், தலைக்கவசம் தொடர்பான உத்தரவை தீவிரமாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப் படும் என உத்தரவாதம் அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in