

திருப்பத்தூரில் ‘பர்மிட்’ இல்லாமல் இயங்கும் ஆட்டோக்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, திருப்பத்தூர் அடுத்த ஆசிரியர் நகரைச் சேர்ந்த வாசகர் ஜோதி ராமலிங்கம் என்பவர் ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையில் புகாரை பதிவு செய் துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது, “ஜோலார்பேட்டை - திருப்பத் தூர் வழித்தடத்தில் மட்டும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன. பேருந்துகள் செல்லாத இடங் களுக்கும், அவசரத் தேவைக்கும் கைகொடுப்பது ஆட்டோக்கள் என்ப தால், பொதுமக்கள் ஆட்டோக்களைப் பயன்படுத்துகின்றனர்.
‘பர்மிட்’, ஓட்டுநர் உரிமம், காப்பீடு உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லாத ஆட்டோக்கள்தான் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பத்தூர் வரை 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்குகின்றன.
4 பேர் மட்டுமே பயணிக்கும் ஆட்டோவில் 12 பேர் பயணிக்கின்றனர். பயணிகளை ஏற்றும் போட்டியில், ஒருவரை ஒருவர் வேகமாக முந்திச் செல்கின்றனர். இதனால், திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் எதிரே, திருப்பத்தூர் - வாணி யம்பாடி சாலையில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால், குறுகிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தடுக்கக் கோரி, வட்டாரப் போக்குவரத்து அலுவல கம், திருப்பத்தூர் போக்குவரத்து காவல் துறை, சார் ஆட்சியர் அலுவல கத்தில் பலமுறை பொதுமக்கள் தரப் பில் புகார் தெரிவித்தும் பயன் இல்லை. திருப்பத்தூரில் கடந்த ஓர் ஆண் டாக போக்குவரத்து காவல் ஆய்வா ளர் இல்லை. ஓர் உதவி ஆய்வாளர், 3 காவலர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது ” என்றார்.
இதுகுறித்து வாணியம்பாடி வட்டா ரப் போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ) அசோகனிடம் கேட்டபோது, “திருப்பத் தூரில் ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தொடர்பாக புகார் கள் வந்து கொண்டிருக்கின்றன. வாணி யம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப் படாத ஆட்டோக்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. திருப்பத் தூர்,ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஆவணமின்றி இயங்கும் ஆட்டோக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.