

தனது முயற்சியால் ஸ்ரீராமானுஜ ருக்கு நினைவு தபால்தலை வெளியிட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்பி கே.என்.ராமச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று வெளி யிட்ட செய்தியில் கூறியிருப்ப தாவது:
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அவ தரித்து வைணவ இறைபணியில் உலகமெல்லாம் சிறந்து விளங்கிய வரும் 120 வருடங்கள் இம்மண் ணில் வாழ்ந்தவருமான ஸ்ரீராமானு ஜரின் 1000-வது அவதார பெரு விழா, மே 1-ம் தேதி (இன்று) ஸ்ரீபெரும்புதூரில் நடக்கிறது.
இந்த விழாவை முன்னிட்டு எனது தொகுதி மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய தொலைத்தொடர்பு அமைச்ச கத்தை அணுகி ஸ்ரீராமானுஜருக்கு நினைவு தபால்தலை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத் தேன்.
எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தொலைத்தொடர்பு துறை அமைச்சகம், ஸ்ரீராமானுஜருக்கு நினைவு தபால்தலை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.