Published : 19 Aug 2016 08:52 AM
Last Updated : 19 Aug 2016 08:52 AM

‘சென்னையின் முக்கிய தருணங்கள்’ என்ற தலைப்பில் ‘தி இந்து’ நடத்தும் புகைப்படக் கண்காட்சி பீனிக்ஸ் மாலில் நாளை தொடக்கம்: ‘சென்னை தினத்தை’ முன்னிட்டு ஒரு வாரம் நடக்கிறது

சென்னை தினத்தை முன்னிட்டு, ‘தி இந்து’ சார்பில் ‘சென்னையின் முக்கிய தருணங்கள்’ என்ற தலைப்பில் அரிய புகைப்படங்கள் இடம்பெறும் புகைப்படக் கண் காட்சி வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நாளை தொடங்குகிறது.

நாட்டின் புகழ்மிக்க பெரு நகரங்களில் ஒன்றான சென்னை, 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி உருவானது. ஆண்டுதோறும் இந்த நாள் ‘சென்னை தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. தற்போது 377-வது ஆண்டு சென்னை தினம் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு ‘தி இந்து’ சார்பில் ‘சென்னையின் முக்கிய தருணங்கள்’ என்ற தலைப்பில் சிறப்பு புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒருவாரக் கண்காட்சி, வேளச் சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலுடன் இணைந்து, அந்த வளாகத்தில் நடத்தப்படுகிறது. இக்கண்காட்சி நாளை (சனிக்கிழமை) தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெறும்.

‘தி இந்து’ ஆவணக் காப்பகத் தில் பாதுகாக்கப்படும் சென்னை யின் முக்கிய நிகழ்வுகள் தொடர்பான, மிகப் பழமையான, அரிய புகைப்படங்கள் இக்கண் காட்சியில் இடம்பெறும். பீனிக்ஸ் மாலுக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் இதை கண்டு ரசிக்கலாம்.

சென்னை தினத்தை முன்னிட்டு, அண்ணா பல்கலை மாணவர்கள் இசையமைத்துப் பாடிய பாடலுடன் கூடிய வீடியோ ஒன்றும் ‘தி இந்து’ சார்பில் தயாரிக் கப்பட்டு வருகிறது. பீனிக்ஸ் மாலில் நடைபெறும் புகைப்படக் கண்காட்சியில் இந்த வீடியோ பாடல் வெளியிடப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x