

ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடத்த நடவடிக்கை எடுக்க கோரி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இதில், லட்சணக் கானோர் பங்கேற்றனர்.
புதுச்சேரி ஏஎப்டி திடலில் தொடர்ந்து 6-வது நாளாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்களத்தில் வெளி நாட்டு குளிர்பானங்களான பெப்சி, கோக், மிராண்டா உள் ளிட்டவற்றை தரையில் கொட்டி ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடத்த நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் மாவட்டத்தில் 5-வது நாளாக நேற்று 15 இடங்களில் 2 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சனிக்கிழமையை விட மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நிலைதான் கடலூரிலும் நீடித்தது. கடலூரில் சனிக்கிழமையன்று 35 இடங்களில் போராட்டம் நடந்தது. நேற்று 19 இடங்களில் 5 ஆயிரம் பேர் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் 50 ஆயிரம் பேர்
அலங்காநல்லூரில் நேற்று ஜல்லிக்கட்டு நடப்பதாக அறிவிக் கப்பட்டு, போராட்டக்குழுவின் கடும் எதிர்ப்பால் ரத்தானது. மேலும், அலங்காநல்லூர், மதுரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் தொடர்ந்தது. மதுரையில் சிறை பிடிக்கப்பட்ட ரயில் 4-ம் நாளாக விடுவிக்கப்படவில்லை. திண்டுக் கல் நத்தம் கோவில்பட்டியில் அறிவிக்கப்பட்ட ஜல்லிக்கட் டும், இளைஞர்கள் எதிர்ப் பால் நடக்கவில்லை. இம்மாவட் டத்திலும் பல இடங்களில் போராட் டங்கள் நடந்தன. விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 50-க் கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் தொடர்ந்தது. 6 மாவட்டங்களில் 80 இடங்களில் நடந்த போராட்டங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.