

ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் கோவை விமான நிலை யத்துக்கு நேற்று காலை 4 மணிக்கு வந்தது. அப்போது, இளைஞர் ஒருவரின் நடவடிக்கையில் சந்தே கம் அடைந்த சுங்கத் துறையினர் அவரிடம் சோதனை செய்தனர்.
அவர் கேரள மாநிலம் கோழிக் கோட்டைச் சேர்ந்த சல்மான் ஃபாரிஸ்(25) என்பதும், அவர் தனது உடம்பில் தங்கக் கட்டி களை மறைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது. அவர், மொத்தம் 932 கிராம் எடை உள்ள 8 தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சல்மான்ஃபாரிஸ், எம்பிஏ முடித்துவிட்டு வேலை தேடி வந்த போது, தங்கக் கடத்தல் கும்பலின் தொடர்பு மூலமாக இதில் ஈடுபட் டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித் தனர். விசாரணைக்குப் பின்னர் அவரைக் கைது செய்தனர்.