

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய சுமார் 70 டி.எம்.சி. நீரைப் பெற்றுத் தர கோரியும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை உள் ளிட்ட மாவட்டங்களில் விவசாயி கள் சங்கங்கள் சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. ஆனால், மேற்கண்ட கோரிக்கை யில் மத்திய அரசு உரிய முறை யில் தலையிடவில்லை.
எனவே, மத்திய அரசை நிர்ப் பந்திக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண் டும். மேலும், நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்த பிரத மரை சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சி பிரதிநிதிகளும் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் மாநில அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.