மல்பரி பயிரிட ஏக்கருக்கு ரூ.10,500 உதவி: சென்னை விமான நிலையத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் தொடங்கப்படும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

மல்பரி பயிரிட ஏக்கருக்கு ரூ.10,500 உதவி: சென்னை விமான நிலையத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் தொடங்கப்படும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்
Updated on
1 min read

சென்னை விமான நிலையத்தில் ரூ.15 லட்சத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் அமைக்கப்படும் என ஊரகத் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவித் துள்ளார்.

மல்பரி பயிரிடும் விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயி ரத்து 500 வீதம் 3 ஆயிரத்து 500 ஏக்க ருக்கு ரூ. 3 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற ஊரகத் தொழில் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழகத்துக்கு வருகை தரும் பயணிகள் பாரம்பரிய கைவினைப் பொருள்களை பார்வையிடவும், அவற்றை வாங்கவும் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் ரூ.15 லட்சத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் அமைக்கப்படும்.

மாமல்லபுரத்தில் உள்ள தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக ஓய்வு விடுதி வளாகத்தில் 4 ஏக்கர் 45 சென்ட் நிலத்தில் நகர்ப்புற கண்காட் சித் திடல் அமைய உள்ளது. மதிப்பீட் டுத் தொகை உயர்ந்துள்ளதால் இத்திட்டத்துக்கு கூடுதலாக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

திருநங்கைகளுக்கு பயிற்சி

2015-ம் ஆண்டு மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட் டம் விருத்தாசலத்தில் 50 திருநங்கை களுக்கு 3 மாதகாலம் வாழைநார் கைத்திறன் தொழில் பயிற்சி அளிக்கப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான இத்திட்டம் ரூ. 10 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.

விவசாயிகளை ஊக்குவிக்க 2016-17-ம் ஆண்டில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்து 500 வீதம் 3 ஆயிரத்து 500 ஏக்கரில் உயர் விளைச்சல் தரும் மல்பரி ரகங்களை பயிரிட ரூ.3 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் நிதி வழங்கப்படும்.

2016-17-ம் ஆண்டில் 1,000 ஏக்கர் மல்பரி தோட்டங்களில் சொட்டு நீர் பாசன முறையை மேற்கொள்ள விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வழங்கப்படும்.

பட்டுப்புழு வளர்க்கும் குடில் அமைக்க ரூ.63 ஆயிரம், ரூ.82 ஆயிரத்து 500, ரூ.87 ஆயிரத்து 500 வீதம் 800 விவசாயிகளுக்கு ரூ.6 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படும்.

வெண் பட்டுப்புழு வளர்ப்பில் தரத்தையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்க நவீன தளவாடங்கள், பண்ணை உபகரணங்கள் வழங்க ரூ.5 கோடியே 25 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

30 லட்சம் வெண்பட்டு முட்டை தொகுதிகளுக்கு போக்குவரத்து செலவினமாக ரூ.30 லட்சம் வழங்கப்படும். ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் செலவில் 2 புதிய வாக னங்கள் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in