

உத்தராகண்டில் திருவள்ளுவர் சிலையை நிறுவ நடவடிக்கை மேற்கொண்ட அம்மாநில முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில். "மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு பிரச்சினையில் உத்தராகண்ட் அரசு துரிதமாகவும், நேர்மறையாவும் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளுவர் சிலை புறக்கணிக்கப்பட்ட செய்தி தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஹரித்வாரின் மேலா பவன் வளாகத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ தாங்கள் ஏற்பாடு செய்துள்ளீர்கள். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக மக்கள் சார்பில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.