

ஓணம் பண்டிகையை ஒட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது.
கோயம்பேடு பூ மார்க்கெட்டிற்கு தினமும் ஆரணி, வேலூர், ஓசூர், தஞ்சாவூர், பெரியபாளையம், பொன்னேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து 50 லாரிகளில் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் பல இடங்களில் பூக்கள் சேதம் அடைந்தன. இதனால் பூக்களின் வரத்து குறைந்தது. இந்நிலையில் ஓணம் பண்டிகையும் நெருங்கியதால் கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. குறிப்பாக ரூ.400க்கு விற்கப்பட்ட மல்லி கிலோ ரூ.800–க்கு விற்கப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்திருந்தது.