பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடைக்கு எதிராக தொடர் போராட்டம்

பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடைக்கு எதிராக தொடர் போராட்டம்
Updated on
1 min read

பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 4-வது நாளாக நேற்று போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம், மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் இணைந்துள்ளன.

பட்டினப்பாக்கத்தில் கண்ணன் என்பவர் கொள்ளையடிக்க முயன்றபோது நடந்த விபத்தில் ஆசிரியை நந்தினி மரண மடைந்தார். இந்த சம்பவத்தையடுத்து, பட்டினப்பாக்கம் டாஸ் மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போடும் போராட்டத்தை நடத்தினர். புதன்கிழமை யன்று நந்தினியின் இறுதி ஊர்வலத்தின்போதும் சில பெண்கள் பட்டினப்பாக்கம் டாஸ் மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

நேற்று முன்தினம், போராட் டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலர் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 4-வது நாளாக நேற்றும் பட்டினப் பாக்கம் டாஸ்மாக் கடைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட் டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக மக்கள் அதிகாரம், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

இரு உயிர்கள் பலி

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட கடல் அறக்கட்டளையின் தலைவரும், ஆர்.கே.நகர் தொகுதி யில் பாமக சார்பில் போட்டியிட்ட வருமான ஆக்னஸ் கூறியதாவது:

பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடை 2008-ம் ஆண்டு முதல் இயங்குகிறது. இந்தக் கடையால், எங்கள் பகுதியில் பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றின் உச்சகட்டமாக நந்தினி, சாகர் என இரு உயிர்களை பறிகொடுத்துள்ளோம்.

எப்போதும் போராடுவோம்

இதற்கு மேலும் இந்த டாஸ்மாக் கடையை அனுமதிக்க முடியாது. நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்பதற்காக தற்காலிகமாக கடையை மூடி வைத்துள்ளனர். எப்போது, கடையைத் திறந்தாலும், நாங்கள் போராடுவோம். இந்தக் கடையை திறக்கவிட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் கடல் அறக்கட்டளை, சீனிவாசபுரம் மகளிர் அமைப்பு, மக்கள் அதிகாரம் உட்பட மேலும் சில அமைப்புகள் இணைந்து பட்டினப்பாக்கம் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in