

வீட்டில் இருந்தபடியே விரைவுத் தபால், பார்சல் அனுப்புவது, அஞ்சல்தலை பெறுவது ஆகிய சேவைகளில் குறைபாடுகள் இருந்தால் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வசதிக்காக, வீட்டுக்கு வரும் தபால்காரரிடமே விரைவு தபால்கள், பார்சல்களை அனுப்புவது, அவரிடமே அஞ்சல்தலைகளை (ஸ்டாம்ப்) வாங்கிக் கொள்வது ஆகிய திட்டங்களை இந்திய அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், தபால் நிலைய கவுன்ட்டர்களில் கூட்ட நெரிசல் குறையும். பொதுமக்களின் நேரம், அலைச்சலும் மிச்சமாகும்.
இந்நிலையில், இச்சேவையில் ஏதேனும் குறைபாடுகள், புகார்கள் இருந்தால் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.