தலித் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தலித் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்
Updated on
1 min read

தலித் பெண்ணை பலாத்காரம் செய்து படுகொலை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மதுக்கூர் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பதிவுரு எழுத்தராகப் பணிபுரிகிறார். மனைவி வீரம்மாள் 1997-ல் இறந்துவிட்டதால், ராஜேந்திரன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு குடவாசலில் வசித்து வருகிறார். மகன்கள் குணசேகரன்(27), முருகன்(22), மகள் கலைச்செல்வி(20) ஆகியோரை சாலியமங்கலத்தில் வசிக்கும் வீரம்மாளின் சகோதரி பாப்பம்மாள் வளர்த்து வந்தார்.

கடந்த ஜூலை 31-ம் தேதி மாலை முதல் கலைச்செல்வியை காணவில்லை. மறுநாள் அதிகாலை கருவேலங்காட்டில் பலத்த காயங்களுடன், கலைச்செல்வி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த குமார்(30), ராஜா (எ) ரங்கராஜன்(37) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்த போலீஸார், பாலியல் பலாத்காரம், கொலை மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தீண்டாமை வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

வாக்குமூலம்

கலைச்செல்வியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்போது எதிர்ப்பு தெரிவித்த அவரை கொலை செய்ததாகவும் கைது செய்யப்பட்ட 2 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப் பினர் நீலமேகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொறுப்பாளர்கள் சின்னை பாண்டியன், அபிமன்னன், சிவகுரு, புண்ணியமூர்த்தி, சத்தியநாதன், முனியாண்டி, நம்பிராஜன் ஆகியோர் நேற்று முன்தினம் கலைச்செல்வியின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் கூறும்போது, “ஒடுக்கப் பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள் நடப்பதும், கொலை செய்யப்படு வதும் தொடர்கிறது. இதனை தடுப் பதுடன், கலைச்செல்வியின் குடும் பத்துக்கு அரசு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in