

ஜல்லிக்கட்டு போராட்ட வன் முறை தொடர்பாக முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன், நேற்று தனது விசாரணையை தொடங்கினார்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரை, மதுரை, கோவை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த 17 முதல் 23-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. மெரினா கடற் கரையில் நடைபெற்ற போராட் டத்தில் கடந்த 23-ம் தேதி வன் முறை வெடித்தது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 31-ம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘‘சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கான காரணங் கள், சூழ்நிலைகள் குறித்து விசாரிக்க தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும்’ என அறிவித்தார். அதன்படி அமைக்கப்பட்டுள்ள விசா ரணை ஆணையத்தின் தலை வராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் நியமிக்கப்பட்டார். இதை யடுத்து நேற்று காலை அவர் தனது விசாரணையை தொடங்கினார்.
விசாரணையின் முதல்கட்ட மாக நடுக்குப்பம், ஐஸ்அவுஸ் காவல்நிலையம், பாரதி சாலை, விவேகானந்தர் இல்லம் உள் ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த ராஜேஷ்வரன், சேத மடைந்த வாகனங்களை பார்வையிட்டதோடு, பொதுமக் களின் கருத்துகளை கேட்டறிந் தார். அவர் நடுக்குப்பம் சென்றபோது அங்கிருந்த மீன் வியாபாரிகள், “தற்போது எங்களுக்கு தற்காலிக மீன் மார்கெட் மட்டுமே அமைத்து தரப்பட்டுள்ளது. எனவே, நிரந்தரமாக மீன் மார்கெட் அமைத்து கொடுக்க வேண்டும்” என தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது, காவல் துணை ஆணையர்கள் சரவணன், பாலகிருஷ்ணன், சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து முன்னாள் நீதிபதி ராஜேஷ்வரன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
வன்முறையால் ஏற்பட்ட சேதங்களை இன்று ஆய்வு செய்துள்ளேன். இது முதல்கட்ட ஆய்வுதான். விசாரணை ஆணையம் இன்னும் 10 நாட்களில் தனது பணியை தொடங்கும். அதற்கென தனியே அலுவலகம் திறக்கப் படும். அந்த அலுவலகம் திறக்கப்பட்டவுடன் அதுதொடர் பான அறிவிக்கை நாளிதழ்களில் வெளியிடப்படும். அதன்பிறகு, குறிப்பிட்ட தேதியில் பாதிக்கப் பட்டவர்கள் தங்களின் கருத்து களை அங்கு வந்து தெரிவிக் கலாம். மக்கள் என்ன கூறு கிறார்கள், காவல்துறையின் கருத்துகள், வீடியோ ஆதா ரங்கள் ஆகியவற்றின் அடிப் படையில் அறிக்கை சமர்ப்பிக் கப்படும். இந்த விசாரணை முடிய 4 மாதங்களாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மெரினா கடற்கரையை ஒட் டிய பகுதிகளில் ஆய்வு செய்த பின் வன்முறையால் பாதிக்கப் பட்ட ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் பகுதி, வடபழனி உள்ளிட்ட இடங்களையும் ராஜேஷ்வரன் பார்வையிட் டார்.