

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க ழகத்தின் கீழ் 14 இணைப்புக் கல்லூரிகளும், கோவை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங் களில் உறுப்புக் கல்லூரிகளும் உள்ளன. கடந்த 1-ம் தேதி வேளாண்மை பல்க லைக்கழகத்துக்கு உடுமலை, வெங் கிட்டாபுரத்தைச் சேர்ந்த மா.செந் தில்வேல் என்பவர் வந்துள்ளார். பல்கலைக் கழக வளாகத்திலுள்ள கிஷான் வேளாண் தகவல் மையப் பணியாளராக தான் நியமிக்கப் பட்டிருப்பதாகவும், அதற்கான பணி நியமன ஆணை உள்ளதா கவும் தெரிவித்துள்ளார். ஆனால், அப்படி ஒரு காலிப் பணியிடம் இல்லை என்பதால், அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி னர். அதில், அந்த பணி நியமன ஆணை போலி என்பது தெரிய வந்தது.
கோவை கிணத்துக்கடவில் 2016 ஜனவரியில் வேளாண்மை பல்க லைக்கழகத்தின் பெயரில் சிலர் வேலைவாய்ப்பு முகாம் நடத்திய தாகவும், ரூ.2 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் இந்த பணி நியமன ஆணையை வழங்கி யதாகவும், ரூ.18,620 ஊதியம் நிர் ணயித்து, ஆக.1-ம் தேதி பணியில் சேருமாறு அவர்கள் கூறியதாகவும் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.
போலி நியமன ஆணையை உறுதி செய்த பல்கலைக்கழக நிர்வாகம், மோசடிக் கும்பலைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை ஆர்.எஸ். புரம் போலீஸில் புகார் அளித்துள் ளது.
ஏமாந்த பட்டதாரிகள்
பல்கலைக்கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘2007-ம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் விவ சாயிகள் தகவல் சேவைக்காக கிஷான் கால் சென்டர்கள் இயங்கி வருகின்றன. அதற்கு போதுமான எண்ணிக்கையில் ஆட்களும் உள்ளனர். ஆனால், இந்த மையத்துக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகக் கூறிக்கொண்டு நாடு முழுவதும் மோசடிக் கும்பல்கள் செயல்படுகின்றன.
கடந்த ஜூன் மாதம் பெங் களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் நொய்டாவில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு முகாம் நடந்த தாகவும், அதில் ரூ.40 ஆயிரம் செலுத்தி பயிற்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றதாகவும் இங்கு வந்தார். அந்த சமயத்தில் மற்றொரு நபரும் இதேபோல இங்கு வந்தார். உடுமலையில் இருந்து செந்தில்வேல் என்பவர் இப்போது வந்துள்ளார். 3 பேருமே பட்டதாரிகள். மோசடிக் கும்பல் களிடம் சிக்கி ஏமாந்துள்ளனர்’’ என்றனர்.
பல்கலைக்கழக பதிவாளர் கு.ரா.அனந்த குமார் கூறும்போது, “பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியு றுத்தி போலீஸில் புகார் கொடுத் துள்ளோம்” என்றார்.
விழிப்புணர்வு இல்லை
போலீஸார் கூறும்போது, ‘‘வேளாண்மை பல்கலைக்கழ கத்தின் பெயரைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு மட்டுமல்ல, மாணவர் சேர்க்கை ஆணைக ளும் போலியாக வருகின்றன. சேலம், மதுரை உள்ளிட்ட பகு திகளில் இருந்து பல புகார்கள் வந்துள்ளன. ஆனால் மோசடி கும்பல்கள் குறித்த எந்த தகவ லும் இல்லாததால், அவர்களைக் கண்டறிவது சிரமமாக உள்ளது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்‘’ என்றனர்.