போட்டித் தேர்வு மூலம் 272 விரிவுரையாளர்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

போட்டித் தேர்வு மூலம் 272 விரிவுரையாளர்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
Updated on
1 min read

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறு வனங்களில் 272 விரிவுரையாளர் கள் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர வியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களில் விரிவுரையாளர் காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டமும், எம்.எட். பட்டமும் கல்வித்தகுதி யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15-ம் தேதி முதல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் வழங்கப்பட உள்ளன. போட்டித்தேர்வு செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in