

ரஜினிகாந்த் இலங்கை செல்ல எதிர்ப்பு தெரிவித்தது ஏன் என்பது குறித்து திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
லைக்கா திரைப்பட நிறுவனத் தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையின் வவுனியாவில் கட்டப்பட்டுள்ள 150 வீடுகளை தமிழ் மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்வதாக அறிவிக்கப் பட்டிருந்தது. திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் எதிர்ப்பால் இலங்கை பயணத்தை ரஜினி ரத்து செய்தார்.
இந்நிலையில், எதிர்ப்பு தெரி வித்தது ஏன் என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம் யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் சென்னையில் செய்தி யாளர்களுக்கு நேற்று கூட்டாக பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:
‘இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்குப் பிறகு இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த, காணா மல்போன தமிழ் இளைஞர்கள், இளம்பெண்களின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். போரின்போது ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும். இனப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கையின் பல் வேறு இடங்களில் தமிழர் கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தச் சூழலில் நடிகர் ரஜினி காந்த் இலங்கை சென்றால் தமிழர் களின் போராட்டத்தை இலங்கை அரசு திசைதிருப்பக்கூடும் என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டது. ‘தமிழர்களுக்கு அனைத்து வசதி களையும் செய்து கொடுத்துள் ளோம். ரஜினி போன்ற நடிகர்களே இலங்கை அரசுக்கு ஆதரவாக உள்ளனர்’ என்பதுபோல உலக அரங்கில் இலங்கை அரசு பிரச்சாரம் செய்யும். எனவேதான், தமிழர்களின் நலன்கருதி இலங்கை பயணத்தை கைவிடுமாறு வேண்டு கோள் விடுத்தோம்.
அவரை நாங்கள் எந்தவிதத் திலும் அச்சுறுத்தவில்லை. நெருக் கடியும் கொடுக்கவில்லை. அவரும் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, வறட்டு கவுரவம் பார்க்காமல், வீண் பிடிவாதம் பிடிக்காமல் இலங்கை பயணத்தை ரத்து செய்தது பாராட்டுக்குரியது. இது அவரது முதிர்ந்த அனு பவம், நாகரிகத்தைக் காட்டு கிறது.
இலங்கை இனப் படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபையில் 45-க்கும் அதிகமான நாடுகள் வலியுறுத்தின. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதர வாகவே செயல்படுகின்றன. பன் னாட்டு விசாரணையில் இருந்து தப்பிக்க இலங்கை அரசு முயற்சிக் கிறது. இலங்கை அரசின் இந்த சூழ்ச்சி வலையில் சிக்க வேண்டாம் என்பதற்காக ரஜினியின் பயணத் துக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மற்றபடி அவர் எப்போது வேண்டு மானாலும் இலங்கை செல்லலாம். தமிழர்களை சந்தித்துப் பேசலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட் சேபணையும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.