

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.
ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் எனவும் தெரிவித்தார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் அதிகபட்சமான 14 செ.மீ மழை பெய்துள்ளது.