

உள்ளாட்சித் தேர்தலில் லட்சிய திமுக தனித்துப் போட்டியிடும் என்று நடிகரும், லட்சிய திமுக தலைவருமான டி.ராஜேந்தர் தெரி வித்தார்.
புதுச்சேரியில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: உள்ளாட்சித் தேர்தலில் லட்சிய திமுக தனித்துப் போட்டி யிடும். அடுத்தவர்களுக்கு உழைத் தது போதும். கூட்டணியை நம்பியும் பயனில்லை. தேர்தல் நேரத்தில் மக் கள் அவசர முடிவு எடுக்கின்றனர். யார் நல்லவர்கள் என மக்கள் சிந் திக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் திமுக பெரும் பான்மை பலம் கொண்ட எதிர்க்கட்சி யாக இருந்தாலும் கச்சத்தீவு உள்ளிட்ட பல பிரச்சினைகைளைப் பற்றி பேசாமல் உள்ளனர். எனக்கு பதவி இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் குரல் கொடுப்பேன்.
உள்ளாட்சித் தேர்தலில் லட்சிய திமுக போட்டியிடுவதற்கான நட வடிக்கையில் இறங்கியுள்ளோம். இது தொடர்பாக திருச்சி, கோவை யில் 17-ம் தேதி நிர்வாகிகளிடம் கருத்து கேட்க உள்ளேன்.
சுவாதி விவகாரம்
சிம்பு ‘பீப்’ பாடல் பாடியதற்காக பெண்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது சுவாதி கொலை வழக்கு தொடர்பாக பெரிய அளவில் அவர்கள் யாரும் பேசவில்லை. எந்த எதிர்ப்பையும் அவர்கள் வெளிக்காட்டவில்லை. அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?
ஆனால் நான் உட்பட பலரும் ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி யில்லை. சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும்’ என்று கூறியிருந் தோம். அதன் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி கொலை, கொள்ளைகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஒரு கருவியாக எதிர்க்கட்சிகள் பயன்படுத்து வார்கள். குற்றச் சம்பவங்களைத் தடுப்பதில் மக்களுக்கு விழிப் புணர்வு தேவை என்றார்.