

அம்மா ஆரோக்கிய திட்டத்தின் மூலம் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 69 பேர் பயனடைந் துள்ளனர். இந்த திட்டத்துக்கு இதுவரை ரூ.2.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அம்மா ஆரோக்கிய திட்டத்தை செயல்படுத்தும் மாவட்ட அலுவலர் களுக்கான மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநர் டாக்டர். க.குழந்தைசாமி, மாநில நலவாழ்வு சங்க குழும இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அம்மா ஆரோக்கிய திட்டம் குறித்த கையேட்டை வெளியிட்டு அமைச் சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ஒருமுறை 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப் படும். முதற்கட்டமாக 400 மேம் படுத்தப்பட்ட மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத் தப்பட்டு வருகிறது.
25 விதமான பரிசோதனை
ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்களுக்கு கட்டணமில்லாமல் 25 விதமான உடல் மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யப்படு கின்றன.
காப்பீட்டுத் திட்டம் மூலமும்..
உயர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படு வோரை, அரசு மாவட்ட மருத்துவ மனைகளிலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உள் நோயாளியாக அனுமதித்து தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.