

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனைக் கூடத்தை இட மாற்றம் செய்யும் விவகாரத்தில் சுயநலவாதிகளுக்கு அரசு அடி பணியாது என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ஆசியாவின் பெரிய துறைமுகமாக மாற்றும் நோக்கத்துடன் முன்னாள் முதல் வர் ஜெயலலிதா ரூ.100 கோடி நிதி ஒதுக்கினார். குளிர்பதன வசதி, கண்காணிப்பு கேமரா, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ரூ.15 கோடியில் அமைக்கப்பட்ட மீன்கள் ஏலம் விடும் இடத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார்.
தற்போதுள்ள இடத்தைவிட இது இரண்டரை மடங்கு பெரியது. சுகாதாரமான வசதிகளைக் கொண் டது. தற்போதுள்ள இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில்தான் உள் ளது. எனவே, இந்த இடமாற்றத் தால் மீனவர்களுக்கு எந்தப் பாதிப் பும் இல்லை. மீன்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும், மீன வர்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதற்காகவே இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு சில சுயநலவாதிகளுக்கு தமி ழக அரசு அடிபணியாது என்றார்.