

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் வரலாற்றுச் சிறப்பும், கலைநயமும் மிக்க 86 நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப் படுகின்றன. அதில் கட்டிடக் கலைக்கும், கலைநயத்துக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் மதுரை திருமலை நாயக்கர் மகால் குறிப்பிடத்தக்கது. இந்த பாரம்பரிய நினைவுச் சின் னத்தை, அதன் பழமை மாறாமல் தொல்லியல்துறை பராமரிக்கிறது. கி.பி. 1623-ல் இருந்து 1659-ம் ஆண்டு வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்த திருமலை நாயக்கரால் இந்த அரண்மனை கட்டப்பட்டதாக வரலாறு.
தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பழங்கால அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்ததாக இந்த அரண்மனை உள்ளது. திருமலை நாயக்கர் அரண்மனையைக் கட்டியபோது இப்போது எஞ்சியுள் ளதைக் காட்டிலும் நான்கு மடங்கு பெரிதாக இந்த அரண்மனை பிரம்மாண்டமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த அரண்மனையில் உள்ள தூண்களை நிமிர்ந்து நோக்கினால் பிரம்மாண்டமாகவும், அமர்ந்து பார்த்தால் கொள்ளை அழகாகவும் இருக்கும்.
மதுரை மீனாட்சியம்மன் கோயி லுக்கு அருகே இந்த அரண்மனை அமைந்திருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளிநாட்டினர் இந்த அரண்மனையை சுற்றிப் பார்த்து ரசித்துவிட்டுச் செல்கின் றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால், அரண்மனைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கிறது. இந்த அரண்மனையைச் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்காக, 2009-ம் ஆண்டு வரை அரண்மனை முன் பேலஸ் ரோடு ‘பார்க்கிங்’க்காக பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு பேலஸ் ரோட்டில் இருந்து திடீரென தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமலைநாயக்கர் மகால் வளாகத்துக்குள் விதிமுறைகளை மீறி மாற்றியுள்ளனர். அதற்கு அப்போதே தொல்லியல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், உள்ளூர் ஆளும் கட்சியினரின் ஆதிக்கத்தால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
தொல்லியல்துறை, திருமலை நாயக்கர் மகால் போன்ற பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பராமரிப்பு வேலைகளைக் கூட செய்யாமல், அதன் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றிப் பார்க்க மட்டுமே அனுமதி உண்டு. வியாபாரம், வணிகம், வாகன நிறுத்தமாக அந்த வளாகப்பகுதிகளை பயன்படுத்தக் கூடாது. பார்க்கிங்குக்கு தனி வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
தொல்லியல்துறையின் இந்த விதிமுறைகளை மீறி, திருமலை நாயக்கர் அரண்மனை தற்போது வணிக வளாகம் போலவும், வாகனக் காப்பகம் போலவும் செயல்படுகிறது. அரண்மனையின் பிரம்மாண்ட நுழைவு வாயில் முன், இடத்தை அடைத்துக் கொண்டு ஜூஸ், பழக்கடை, ஊசி, பாசி கடை, இளநீர் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்படுகின்றன. சில தள்ளுவண்டி கடைகளும் ஆங்காங்கே நிறுத்தி வியாபாரம் செய்கின்றனர். இந்த கடைகள் செயல்படுவதற்கு தொல்லியல் துறையும், மாநகராட்சியும் எந்த அனுமதியும் கொடுக்கவில்லை. ஆனால், யார் அனுமதியின் பேரில் இந்த கடைகள் செயல்படுகிறது என் பது தெரியவில்லை. அதுமட் டுமில்லாது, அரண்மனை வளா கமே பார்க்கிங் ஏரியா வாகச் செயல்படுவதால் அரண் மனை நுழைவு வாயில், தொல்லியல் துறை அலுவலக வாயில், தொல்லியல்துறை அலுவலகம், அரண்மனை வளாகம் உட்பட அனைத்து இடங்களிலும் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளன. கார், வேன், பஸ் போன்ற வாகனங்களை விதிமீறி அரண்மனை நுழைவு வாயில் முன்பும், வளாகத்திலும் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி வைத்துள்ளனர். அதனால், அரண்மனையின் நுழைவுப் பகுதி அதன் அழகையும், கலைநயத்தையும், பிரமாண் டத்தையும் இழந்து நிற்பதைப் போல தோற்றமளிக்கிறது.
சுற்றுலாப் பயணிகள், பிரம்மாண்ட நுழைவாயில் வழியாக அரண்மனைக்குள் செல்ல முடி யாமல் சிரமம் அடைந் துள்ளனர்.
இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,
இன்றும் மாநகராட்சி வாகனக் காப்பக டெண்டரில் ‘பேலஸ் ரோடு’ பார்க்கிங் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தொல்லியல்துறை கட்டுப்பாடுகளை மீறித் தான் உள்ளே வாகனங்களை நிறுத்துகின் றனர். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. தற்போது ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் திருமலை நாயக் கர் அரண்மனைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் வாகனங் களை நிறுத்த தனியாக மல்டிலெவல் பார்க்கிங் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரண்மனை வளாகத்திற்குள் கடைகளுக்கு அனுமதி கிடையாது. ஆனால், அவர்கள் நடைபாதை கடைகள் மாதிரி நடத்தி வருகிறார்கள். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றார்.
மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியது: ேலஸ் ரோட்டில் நெரிசல் அதிகரித்ததால் அரண்மனையை சுற்றிலும், பத்திரப்பதிவு அலுவலக பின்புறமும் நான்கு சக்கர வாகனங்களை மட்டும் நிறுத்த அனுமதி அளித்துள்ளோம். இரு சக்கர வாகனங்களை நிறுத்தவும், கட்டணம் வசூலிக்கவும் அனு மதி கொடுக்கவில்லை. பேலஸ் ரோட்டில் நெரிசல் அதிகமாக இருந்ததால் அவர்கள் வாகனங் களை உள்ளே நிறுத்தியிருப்பர்.
‘பூங்கா’வில் இருசக்கர வாகனக் காப்பகம்
அரண்மனையைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள், சிறிதுநேரம் ஓய்வெடுத்துச் செல்ல, அரண்மனை வளாகத்தில் பூங்கா ஒன்று செயல்படுகிறது. கடந்த காலத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பூங்காவை, தற்போது மாநகராட்சி பராமரிக்கிறது. பூங்காவில், நடைபாதை வியாபாரிகள் நுழைந்து வெள்ளரி, பொரி, கடலை போன்றவற்றை விற்று பூங்கா வளாகத்தை குப்பையாக்கி வருகின்றனர். செடி, கொடிகளும் பராமரிப்பு இல்லாமல் கருகிப் போய் விட்டன. இந்தப் பூங்கா, இருசக்கர வாகனக் காப்பகமாக தற்போது மாற்றப்பட்டுள்ளது. இங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்த மாநகராட்சியும், தொல்லியல் துறையும் அனுமதி கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அப்படி இருந்தும், சுற்றுலாப் பயணிகளிடம் பகிரங்கமாக ரூ. 10-க்கு டிக்கெட் அச்சடித்து கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
ஆட்கள் பற்றாக்குறையால் கண்காணிப்பு இல்லை
அரண்மனையின் தொல்லியல்துறை அலுவலகத்தில் தொல்லியல் துறை உதவி இயக்குநர் தலைமையில் 36 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், இரு கல்வெட்டு ஆய்வாளர், 2 தொல்லியல் ஆய்வாளர்கள், ஒரு காப்பாட்சியர் ஆகிய பணியிடங்களையும் காப்பாட்சியர் ஒருவரே பார்க்கிறார். துப்புரவு பணியாளர் ஒருவர், காவலாளிகள் 4 பேர், ஒரு சூப்பிரண்ட், 2 இளநிலை உதவியாளர், 2 அலுவலக உதவியாளர் உட்பட மொத்தம் 11 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். அதனால், அரண்மனை வளாகத்தில் கண்காணிப்பும், கண்டிப்பும் இல்லை.