

யோகா கலையை மத சம்பந்தப்பட்ட அம்சமாக மாற்றி மக்களை பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரி வித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களின் கூட்டம் நேற்று சத் தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் அனைவரும் ஈடுபட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஜனநாயக, மதசார்பற்ற சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியில் உறுப் பினர் சேர்க்கை பணிகளை ஒரு மாதத்துக்குள் முடிக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் வேட்பாளராக தலித் சமூகத்தை சேர்ந்தவரை பாஜக அறி வித்துள்ளது. தலித் வேட்பாளரை அறிவிப்பது இது முதல்முறையல்ல. தலித் சமுதாயத்தை சேர்ந்த கே.ஆர். நாராயணனை குடியரசுத் தலைவராக்கியது காங்கிரஸ் கட்சி தான். பாஜக-வின் 3 ஆண்டுகால ஆட்சியில் தலித் மற்றும் சிறு பான்மையின மக்கள் பாதிக்கப்பட் டுள்ளனர். அதனால் ஏற்பட்ட கட் டாய சூழலில் தலித் ஒருவரை வேட் பாளராக அறிவித்துள்ளனர். அவர் பல ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் அமைப்பில் இயங்கியவர்.
காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 22-ம் தேதி (இன்று) நடைபெறுகிறது. அப்போது வேட் பாளர் குறித்து முடிவு செய்யப் படும். மாட்டிறைச்சி விவகாரத்தில் கேரளா, கோவா, புதுச்சேரி மாநிலங் களைப் போல தமிழக அரசும் எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
யோகா கலையை மதசம்பந்தப் பட்ட அம்சமாக மாற்றி, மத திணிப்பை செய்து, மக்களை பிளவுபடுத்த பாஜக முயற்சிக் கிறது. காங்கிரஸ் கட்சி யோகா வுக்கு எதிரானது இல்லை. அதேவேளையில் யோகாவை பாஜக சொந்தம் கொண்டாடுவது கண்டிக்கத்தக்கது. அதிமுக பணபேர விவகாரத்தில் ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனு மீது தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தின்போது பாமக-வின் மாநில செயலாள ரும் திருநெல்வேலி மாவட்ட தலைவருமான நவமணி பாண் டியன் தனது ஆதரவாளர் களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.