Published : 07 Feb 2014 12:00 AM
Last Updated : 07 Feb 2014 12:00 AM

சென்னையில் 16 மண்டலங்களில் நாளை குடும்ப அட்டை குறைதீர் கூட்டம்- பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள்

குடும்ப அட்டைகளில் மாற்றம் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து வரும் 8 ம் தேதி சென்னையில் 16 மண்டலங்களில் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடைபெற உள்ளன.

இது குறித்து தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் உள்ளதாவது: குடும்ப அட்டைக ளில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்ட முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது .

அதன்படி உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சென்னையில் 16 மண்டல பகுதிகளில் மக்களிடம் குறைதீர்ப்பு கூட்ட முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மக்களிடம் குறைகள் கேட்டு தீர்வு காணும் வகையில் இணைப்பில் குறிப்பிட்டுள்ள மையங்களில் குறைதீர்ப்பு கூட்ட முகாம் 8.2.2014 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த குறைதீர்ப்பு கூட்டத் தில் பொது விநியோக திட்டத் தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

சம்பந்தப்பட்ட பகுதியை சுற்றி வாழும் பொது மக்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், பொது விநியோக திட்ட கடை களின் செயல்பாடு, பொது விநி யோக திட்ட பொருட்கள் கிடைப் பது, தனியார் துறையில் சந்தை யில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தெரிவிக்கலாம்.

மேலும் மக்கள் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரி வித்தால் குறைகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும். சென்னையில் உள்ள 16 மண்டல பகுதி வாழ் பொதுமக்கள் இந்த வாய்ப் பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மண்டலம் கூட்டம் நடைபெறும் இடங்கள்

மண்டலம்1:சிதம்பரனார்

முத்தி யால்பேட்டை ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, 80, தம்பு செட்டி தெரு, மண்ணடி, சென்னை-1 (காளி காம்பாள் கோவில் அருகில்).

மண்டலம் 2:இராயபுரம்சென்னை

நடுநிலைப்பள்ளி, கார்னேஷன் நகர், எருக்கஞ்சேரி ரோடு, கொருக்குப்பேட்டை, சென்னை-21 (தண்டையார்பேட்டை மேம் பாலம் அருகில்).

மண்டலம் 3:

பெரம்பூர் சென்னை துவக்கப்பள்ளி, வ.உ.சி. விளை யாட்டு திடல், 143, நியு பேரக்ஸ் ரோடு, பட்டாளம், சென்னை-12 (பட்டாளம் காவல் நிலையம் எதிரில்).

மண்டலம் 4:

அண்ணாநகர்காம ராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, பு.எண்.66/ப.எண்.162, என்.எம்.கே. தெரு, அயன்புரம், சென்னை-23 (அயன்புரம் மார்க்கெட் பின் புறம்) .

மண்டலம் 5:

அம்பத்தூர் வில்லி வாக்கம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, 4வது பிளாக், எம்.எம்.டி.ஏ.காலனி, மதுரவாயல், சென்னை-95 (மதுரவாயல் பள்ளி வாசல் அருகில்.

மண்டலம் 6:

வில்லிவாக்கம் சென்னை துவக்கப் பள்ளி, 34, சீனிவாசா நகர் மூன்றாவது தெரு, கொளத்தூர், சென்னை-99 (கொளத்தூர் காஞ்சி ஓட்டல் பின் புறம்).

மண்டலம் 7:

திருவொற்றியூர் சமு தாய கூடம், சுனாமி குடியிருப்பு, எர்ணாவூர், சென்னை 57.

மண்டலம் 8:

ஆவடி பெருநகராட்சி துவக்கப்பள்ளி, சத்தியமூர்த்தி நகர், திருமுல்லைவாயல், சென்னை-600 062. (காவலர் குடி யிருப்பு அருகில்).

மண்டலம் 9:தி.நகர்

ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளி, ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை 600 087, (சென்னை மாநகராட்சி 11-வது மண்டல அலுவலகம் அரு கில்).

மண்டலம் 10:

மயிலாப்பூர் சென்னை உயர்நிலைப் பள்ளி, கதவு எண்.76, காமராஜர் அவென்யூ, அடை யாறு, சென்னை 600 020. (176-வது மாமன்ற உறுப்பினர் அலுவலகம் பின்புறம்).

மண்டலம் 11:

பரங்கிமலை புனித தோமையார் மலை ஊராட்சி ஒன் றிய நடுநிலைப் பள்ளி, நடராஜன் தெரு, மூங்கில் ஏரி, பம்மல், சென்னை-75 (புற்றுக்கோயில் எதிர்புறம்).

மண்டலம் 12:

தாம்பரம் பீர்க்கன் கரணை பேரூராட்சி அலுவலகம், சீனிவாசா நகர், பீர்க்கன்கரணை, சென்னை-600 063.

மண்டலம் 13:

சைதாப்பேட்டை சென்னை மாநகராட்சி கூடம், கெங்கையம்மன் கோயில் தெரு, கட்டபொம்மன் பிளாக், ஜாபர் கான்பேட்டை, சென்னை-600083.

மண்டலம் 14:

ஆயிரம் விளக்கு புனித பிரான்சிஸ் சேவியர் நடு நிலைப் பள்ளி, 153, டி.டி.கே ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 (அடையாறுகேட் ஓட்டல் அருகில்).

மண்டலம் 15:

சேப்பாக்கம் சென்னை துவக்கப் பள்ளி, கதவு எண். 25, நாகப்பன் தெரு, புதுப் பேட்டை, சென்னை-600 002.

மண்டலம் 16:

சோழங்கநல்லூர் அரசினர் உயர் நிலைப் பள்ளி, பள்ளிக்கூடசாலை, கந்தன்சாவடி, பெருங்குடி, சென்னை-600 096. (184வது வார்டு மாமன்ற உறுப் பினர் அலுவலகம் பின்புறம்) உள்ளிட்ட இடங்களில் குறைதீர்ப்பு கூட்ட முகாம்கள் நடைபெறும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொது விநியோக திட்டத் தைச் செயல்படுத்தும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவு துறை மற்றும் தமிழ் நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x