வானிலை முன்னறிவிப்பு: கடலோர மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: கடலோர மாவட்டங்களில் லேசான மழை வாய்ப்பு
Updated on
1 min read

மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மையம் கொண்டிருப்பதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம், ''மத்திய வங்கக் கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாகவும், உள்மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்'' என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in