

சூளகிரி அருகே விவசாய கிணறு களுக்கு போலி மின் இணைப்பு வழங்கிய விவகாரத்தில், ரூ.8.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பதில், தாங்களே அபராதத் தொகையை செலுத்துவ தாக போலி மின் இணைப்பு வழங்கிய மின்வாரிய ஊழியர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் அத்திமுகம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர், தங்கள் கிணறுகளில் பம்ப் செட் அமைக்க மின் இணைப்பு கேட்டு, பேரிகை துணை மின் நிலையத்தில் விண்ணப்பித்துள்ளனர். முன் னுரிமை அடிப்படையில் வழங்கா மல், பலருக்கு போலியாக மின் இணைப்புகள் வழங்கியதாக மின் வாரிய அலுவலர்களுக்கு புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அத்திமுகம் கிராமத்தில் சேலம், கோவை, ஈரோட் டைச் சேர்ந்த மின்வாரிய பறக்கும் படை அதிகாரிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு களை ஆய்வு செய்தனர். ஆய்வில், 8 மின் இணைப்புகள் போலியாக வழங்கப்பட்டுள்ளது தெரிந்தது.
இதையடுத்து விவசாய கிணற் றுக்கு சென்ற மின் இணைப்புகளை மின் வாரியத்தினர் துண்டித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவ சாயிகள், நேற்று முன்தினம் இரவு அத்திமுகம் துணை மின் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, மின் வாரிய ஊழியர்கள் 3 பேர் தங்க ளிடம் பணம் பெற்றுக்கொண்டு, போலியாக இணைப்புகளை வழங்கியதாக புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து புகார் கூறப்பட்ட 3 ஊழியர்களிடம் அலுவ லர்கள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து ஓசூர் கோட்ட பொறியாளர் குமார், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘அத்திமுகம் கிராமத்தில் 8 விவசாய மின் இணைப்புகளுக்கு போர்மேன் பாபுலால்(48), கள உதவியாளர் லோகேஷ்(28), மஸ்தூர் திம்ம ராயப்பா(38) ஆகியோர் விவசாயி களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு போலியாக இணைப்பு வழங்கியுள்ளனர். 8 இணைப்புகளுக்காக ரூ.8 லட்சத்து 76 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 3 ஊழியர்களே செலுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், 3 பேர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.