Published : 21 Jun 2016 09:40 AM
Last Updated : 21 Jun 2016 09:40 AM

சிறைவாசிகள் உரிமையை பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

சிறைவாசிகளின் உரிமையைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

உடுமலைப்பேட்டையில் கலப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர் கடந்த மார்ச்சில் கொல்லப்பட்டார். இக்கொலையில் சங்கர் கலப்பு திருமணம் செய்துகொண்ட கவுசல்யாவின் மாமா பாண்டி த்துரை உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாண்டித்து ரையின் மனைவி சுமதி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனு:

திருச்சி சிறையில் என் கண வருக்கு நெஞ்சுவலி வந்தது. அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் மீண்டும் சிறையில் அடைத்தனர். ஆனால் என் கணவர் முழுமையாக குணமடையவில்லை. இதனால் என் கணவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். சிறை எஸ்.பி. தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்றால் மற்ற கைதிகளும் அந்த வசதியை கோருவர். மனுதாரரின் கணவர் தற்போது நலமுடன் உள்ளார் எனக் கூறப்பட்டிருந்தது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தனது கணவ ருக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்கிறார். மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்த பிறகே அவரை சிறையில் அடைத்துள்ளனர். அரசு மருத்துவர்களின் தரத்தை அரசு குறைத்து மதிப்பிடவில்லை. தனியார், அரசு மருத்துவமனை இடையே உள்ள வித்தியாசத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குவிகின்றனர். அங்கு பணியாளர் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையும் உள்ளன.

குண்டர் சட்டக் கைதிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாது என சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். சிறை கைதிகளும் மனிதர்கள்தான். குற்றம் செய்ததால் சிறை கைதிகள் மனிதர்கள் இல்லை எனக் கூறமுடியாது.

இந்தியாவில் அடிப்படை உரிமை என்பது அனைவருக்கும் பொதுவானது. இதனால் தரமான சிகிச்சை பெற விரும்புவது ஒருவரது அடிப்படை உரிமையாகும். ஒருவரின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை. மனுதாரரின் கணவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் இருப்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் கைதியின் உயிர் முக்கியம். உயிர் போனால் திரும்ப வராது.

நிர்வாக காரணங்களுக்காக சிறை கைதிக்கு தனியார் மருத்து வமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது. இதனால் மனுதாரரின் கணவரை அவரது சொந்த செலவில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு இந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும்.

மேலும், இதுபோன்ற கோரிக் கையுடன் கைதிகள் மனு அளித் தால், தகுதி அடிப்படையில் சிறை நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். சிறைவாசிகளின் உரிமைகளைப் பாதுகாக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x