மார்ச் 1-ல் சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ தேர்வுகள் தொடக்கம்

மார்ச் 1-ல் சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ தேர்வுகள் தொடக்கம்
Updated on
1 min read

சி.பி.எஸ்.இ. ப்ளஸ் டூ தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12-ம் வகுப்பு தேர்வு ஆரம்பித்த சில நாட்களில் 10-ம் வகுப்பு தேர்வும் தொடங்குகிறது.

தேர்வு அட்டவணை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன் டையூ ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 12-ம் வகுப்பு தேர்வை 80 ஆயிரம் மாணவ-மாணவிகளும், 10-ம் வகுப்பு தேர்வை ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேரும் எழுத உள்ளதாக மண்டல அதிகாரி டி.டி.எஸ்.ராவ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in