

தமிழகம் முழுவதும் சலூன்களில் முக சவரம் மற்றும் முடிதிருத்தும் கட்டணம் உயர்கிறது.
இட வாடகை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ம் தேதி முதல், முக சவரம் மற்றும் முடிதிருத்தும் கட்டணத்தை உயர்த்த, கடந்த நவம்பர் மாதம் ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதன்கிழமை முதல் தமிழகம் முழுவதும் சலூன் கடைகளில் உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
உயர்த்தப்பட்ட புதிய கட்டணங்கள் கிராமப்புறங்களில் உள்ள சலூன் கடைகளில் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.