

சென்னையில் பணி செய்து வந்த ஆயுதப்படை பிரிவு போலீஸார் 336 பேர் சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் பெற்று சென்றனர்.
சென்னை ஆயுதப்படை பிரிவு போலீஸாக பணி செய்தவர்கள் பல் வேறு காரணங்களுக்காக சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் கேட்டு டிஜிபி டி.கே ராஜேந்திரனிடம் மனு அளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து 336 பேருக்கும் பணி மாறுதலுக்கான அனுமதியை டிஜிபி வழங்கினார். ஆனால், கடந்த 4 மாதங்களாக அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. சென்னை காவல் ஆணையர் அனுமதித்த பிறகே சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியும். இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆயுதப்படை பிரிவு போலீஸார் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல சென்னை காவல் ஆணையர் கரண் சின்ஹா அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.