

“2 நாள் கருத்தரங்குக்கு கூட்டம் குறையவே இல்லை. முதல் நாள் வந்த கூட்டம் கேட்டாச்சு, போயாச்சு என இல்லாமல் மீண்டும் இரண்டாவது நாளும் கூட்டம் அதிகம் இருந்தது. இதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இக்கூட்டத்தில் நிறைய பேசியாகி விட்டது. அடுத்ததாக செயலில் இறங்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு என்னுடைய வாழ்நாளில் ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. இந்த சமூகத்தில் தான் இருந்தோமா, என்ன கற்றுக் கொண்டோம் என்ற ஒரு குற்ற உணர்ச்சி மனசில் இருந்தது. இது ஒரு மறக்கவே முடியாத நாளாக உள்ளது.
எப்படி நாம் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதை அனைவரும் யோசித்தே ஆக வேண்டும்.
‘யாதும் ஊரே’ என்பது அகரமோ, தி இந்துவோ, புதிய தலைமுறையோ ஆரம்பித்தது என சொல்ல வேண்டாம்.
இது நம்மளோடது. உங்களுடையது. இதில் யாருடைய முகமும் கிடையாது. சுற்றுச்சூழல் கல்வி, மரம் நடுதல் பராமரித்தல், நீர் நிலைகள் பராமரிப்பு, கழிவுப் பொருள் மேலாண்மை ஆகிய 4 விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில், யார் யாருக்கு என்னென்ன விருப்பம் உள்ளதோ தன்னார்வலர்கள் அந்தந்தப் பிரிவுக்கு உங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். >yadhum.in என்ற இணையதளத்தில் உங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.