Published : 03 Jan 2016 12:56 PM
Last Updated : 03 Jan 2016 12:56 PM

சமீபத்திய வெள்ள பாதிப்புகளை பருவநிலை மாற்றத்தோடு இணைத்து ஆராய வேண்டும்: இந்து என்.ராம் வலியுறுத்தல்

வெள்ள பாதிப்புக்குப் பிறகு ‘யாதும் ஊரே’ என்னும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இதற்கு காரணமாக இருந்த நடிகர் சூர்யாவுக்கு எனது வாழ்த் துகளை தெரிவித்துக் கொள் கிறேன். சென்னை, கடலூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட போது, கொஞ்சமும் சோர் வடையாமல், எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி ஏராளமான நல்ல உள்ளங்கள் மக்களுக்கு உதவி களை செய்தன.

இது இயற்கையால் வந்த பேரிடரா இல்லை செயற்கையான பேரிடரா என்ற விவாதம் நடந்து வருகிறது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மறக்கக்கூடிய விஷயம் அல்ல. எனினும், நடந்த பிரச்சினைகளையும், தவறுகளுக் கான காரணம் யார் என்பதையும் தாண்டி நாம் அடுத்தக் கட்டத்துக்கு செல்ல வேண்டிய தேவை உள்ளது என்று சூர்யா கூறினார். வெள்ளத்தின் தாக்கத்திலிருந்து மக்கள் முழுமையாக விடுபட வேண்டும் அந்தப்பணியைத்தான் நாம் செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் இழப்புகளை சந்தித்து நிற்கின் றனர். அவர்களின் இழப்புகளை ஈடு செய்ய எவராலும் முடி யாது. இது குறித்து நாம் விவாதித்து ஒரு தீர்வை எட்ட வேண் டும். பருவநிலை மாற்றம் தொடர்பாகவும், புவி வெப்ப மயமாதல் தொடர்பாகவும் நாம் பேசியாக வேண்டும். அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய ஆய்வுகள் இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

சென்னை மட்டுமன்றி இங்கி லாந்து, அமெரிக்கா போன்ற இடங்களிலும் சமீபத்தில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த பாதிப்புகளை பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதலோடு தொடர்புப் படுத்தி விவாதங்கள் மற்றும் ஆய்வுகளை தொடங்க வேண் டும். இதன் மூலம் எதிர்கால பேரி டர்களை தவிர்க்கலாம். நீர் நிலை களை பாதுகாக்க வேண்டிய கட மையும் நமக்கு உள்ளது. ‘யாதும் ஊரே’ முயற்சி வெறும் தொடக் கமாக இல்லாமல், தொடர்ந்து இயங்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x