Published : 28 Sep 2016 08:56 AM
Last Updated : 28 Sep 2016 08:56 AM

ஆர்வம் காட்டாத மாவட்ட செயலாளர்கள்: தேமுதிகவில் வேட்பாளர்கள் தேர்வு தாமதம்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று கூறியதால் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். இதனால், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்த லின்போது மக்கள் நலக் கூட்டணி, தமாகாவுடன் சேர்ந்து போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தேர்தல் தோல்விக்குப் பிறகு ம.ந.கூட்டணி யில் இருந்து தேமுதிக விலகியது. இந்தச் சூழலில், உள்ளாட்சித் தேர் தல் குறித்து ஆலோசிப்பதற்கான தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த 20-ம் தேதி நடந்தது. அப்போது, தனித்துப் போட்டியிடும் வகையில் பணிகளை தொடங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டதாக நிர்வாகிகள் கூறினர்.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்காக தேமுதிக சார்பில் மாவட்ட வாரியாக மேற்பார்வை யாளர்கள் குழு நியமிக்கப்பட்டு கடந்த 21-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் செய்யப் பட்டு வருகின்றன. விருப்ப மனு அளிப்பதில் தொண்டர்கள் பெரிய அளவில் ஈடுபாடு காட்டாததாலும், மாவட்டச் செயலாளர்கள் ஆர்வ மில்லாமல் உள்ளதாலும் வேட் பாளர் தேர்வு தாமதமாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக தேமுதிக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தலை முன் னிட்டு தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த மாதம் செயல் வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைமைக் கழக நிர்வாகிகள், உத்தேச வேட்பாளர் பட்டியலை தயாரிக்க வலியுறுத்தினர். அதற் கான பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஆனால், தேர்தலில் போட்டியிடுவதில் தொண்டர்கள் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை.

மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தி

இதையடுத்து, கடந்த 20-ம் தேதி நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர் தலை புறக்கணிக்க வேண்டும் என்று பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் கருத்து தெரி வித்தனர். அதை ஏற்காமல் தனித்துப் போட்டியிடுவதில் கட்சித் தலைமை உறுதியாக இருந்தது. இதனால், பல மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். சிலர் திமுகவுக்கு சென்றனர்.

மாவட்டச் செயலாளர் கூட் டத்துக்கு மறுதினமே விருப்ப மனு விநியோகம் தொடங்கியது. முதல் 2 நாட்கள் சிலர் மனுக்களை அளித்தனர். ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மனு அளிக்க யாரும் வரவில்லை. தனித்துப் போட்டி என்பதால் மாவட்டச் செயலாளர்களும் பெரிதாக ஆர் வம் காட்டவில்லை. இந்தக் காரணங்களால் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு பணி தாமத மாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x